சோற்று பசி தீர்ந்து விட்டால் போதும் என்பாய்,
உடனே காதல் பசி நீ கொள்வாய்,
காதல் பசி தீர்ந்து விட்டால் போதும் என்பாய்,
உடனே காசு பசி நீ கொள்வாய்,
காசு பசி தீர்ந்தால் பதவி பசி கொள்வாய்,
பதவி பசி போனால் புகழ் பசி கொள்வாய்,
இந்த மனிதன் கொண்ட பசியோ அது முடிந்து போவதில்லை,
இந்த மண் கொண்ட பசியோ ரொம்ப வாழ விட்டதில்லை,
இந்த உலகம் பேசும் ஒரே பாசை பசி தான்..............................