கருவறையில் காதலை விதைத்து தெருவறையில் காதலை சிதைத்தால்
யார் மீது குற்றம் சுமத்துவதோ,
உடலுக்குள்ளே இதயத்தை வைத்து இதயத்திலே காதலை புதைத்தால்
உலகத்துக்கு உண்மை தெரியாதோ,
அட பிரிவு என்னும் நோயினையும் கொடுத்தது ஏன் என்று கேளுங்களேன்,
பிரிவினையே அடைவதனால் காதலும் சாகுமா கூறுங்களேன்,
நானும் துறவியில்லை, வேறு பிறவியில்லை................
வாழ்ந்துவிட மனிதனைப்படைத்தான்
ReplyDeleteவாழவழி சொல்லியும் கொடுத்தான்
காதலை ஏன் இடையில் வைத்தானோ ?
கண்களிலே உருவத்தை விதைத்தான்
மனதினிலே பருவத்தை கொடுத்தான்
மனதிலே ஏன் காதலை தைத்தானோ ?
பல தலைமுறையின் சாபமிது
எங்கே சென்று இதைப்போக்குவது ?
வளருகிற காதலிது எப்படி இதை நீக்குவது ?
உலகம் பெரிதுமில்லை காதல் சிறிதுமில்லை